News September 14, 2024
தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்
அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண்: 52
குறள்: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். பொருள்: இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
Similar News
News August 13, 2025
டிசைனிங் ‘ஜாம்பவான்’ குமார் காலமானார்!

1000 படங்களுக்கு மேல் பணியாற்றிய போஸ்டர் & டிசைனிங் ‘ஜாம்பவான்’ குமார்(67) உடல்நலக் குறைவால் காலமானார். 1983-ல் வெளியான ‘சலங்கை ஒலி’ படத்தில் தொடங்கி ‘சபாஷ் நாயுடு’ வரை தொடர்ச்சியாக கமலுடன் குமார் பணிபுரிந்துள்ளார். தேவர் மகன், விருமாண்டி, தளபதி, படையப்பா, கில்லி, வல்லவன் என பல Iconic பட போஸ்டர்கள் இவரின் கைவண்ணம்தான். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News August 13, 2025
தேர்தல் ஆணையத்தை நாடும் அன்புமணி

பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் வழங்க அன்புமணி முடிவு செய்துள்ளார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில், அன்புமணியின் பாமக தலைவர் பதவி காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த பொதுக்குழு செல்லாது என்று ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பொதுக்குழுவால் தலைவராக தேர்வானதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்தை (EC) அன்புமணி நாடவிருக்கிறார்.
News August 13, 2025
அரிவாளை பார்த்ததும் கவின் ஓடினான்: சுர்ஜித் வாக்குமூலம்

நெல்லையில் கவினை ஆணவப்படுகொலை செய்த சுர்ஜித், அவனது தந்தை சரவணனிடம் தனித்தனியே சிபிசிஐடியினர் விசாரித்தனர். இதன்பின் கொலை நடந்த KTC நகருக்கு சுர்ஜித்தை அவர்கள் அழைத்து சென்றனர். அங்கு, கவினை கொலை செய்ய அரிவாளை எடுத்தபோது, தவறுதலாக கீழே விழுந்ததும், அதை பார்த்தவுடன் கவின் ஓடியதாகவும், பின்னர் துரத்தி சென்று வெட்டியதையும் சுர்ஜித் நடித்து காண்பித்தான். இதனை சிபிசிஐடியினர் வீடியோ பதிவு செய்தனர்.