News September 13, 2024
பூக்களின் விலை கடுமையாக உயர்வு

தமிழகத்தில் அனைத்து மலர் சந்தைகளிலும் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று மல்லிகை ₹800க்கும், பிச்சி ₹600க்கும் விற்பனையான நிலையில், ஓணம், ஆவணி கடைசி முகூர்த்த நாள்களை முன்னிட்டு கடுமையாக விலை உயர்ந்துள்ளது. அதன்படி, பிச்சிப்பூ கிலோ ₹1,500க்கும், மல்லிகைப்பூ ₹2,500க்கும், அரளிப்பூ ₹400க்கும், முல்லைப் பூ ₹1,500க்கும் விற்பனையாகிறது. நாளை இன்னும் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News October 27, 2025
One last time.. ரோஹித் சஸ்பென்ஸ் பதிவு

ODI தொடரை முடித்துவிட்டு, ரோஹித் இந்தியா திரும்பியுள்ளார். அதற்கு முன்னதாக, ‘One last time, signing off from Sydney’ என்று X பக்கத்தில் பதிவிட்டது வைரலாகிறது. 3-வது ODI போட்டியின் ஆட்ட நாயகன் & தொடர் நாயகன் விருதையும் வென்று, 2027 உலகக் கோப்பைக்கான கதவை பிரகாசமாக திறந்தார் ரோஹித். ஆனால், ஒன் லாஸ்ட் டைம் என கூறியதும் ரோஹித் ஓய்வு பெறுகிறாரோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
News October 27, 2025
8-ம் வகுப்பு மாணவிக்கு கன்னித் தன்மை சான்று கேட்ட பள்ளி

உ.பி.,யின் மொரதாபாத்தில் மதரஸா சார்பில் நடத்தப்படும் பள்ளி ஒன்றில், 8-ம் வகுப்பு சேர்க்கைக்காக மாணவி ஒருவர் தாயாருடன் சென்றுள்ளார். மாணவியின் கன்னித்தன்மை சான்று அளித்தால் மட்டுமே அட்மிஷன் என்று பள்ளி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், பள்ளி அட்மிஷன் பொறுப்பு அதிகாரி ஷாஜஹான் கைது செய்யப்பட்டுள்ளார்.
News October 27, 2025
அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்

*புத்திசாலிகளை போல சிந்தியுங்கள், ஆனால் சாதாரண நபர்களை போல பேசுங்கள்.
*தன் எதிரிகளை வெல்பவனை விட, தன் ஆசைகளை வெல்பவனே தைரியமானவன்.
*கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் அதன் பழங்கள் இனிப்பானவை.
*தனது அச்சங்களை வென்றவர் தான், உண்மையிலேயே சுதந்திரமாக இருப்பார்.
*கீழ்ப்படிய கற்றுக்கொள்ளாதவன் ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியாது.


