News September 13, 2024
மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தனர்: கோவை எம்.பி

அன்னபூர்ணா குழும தலைவர் சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளதாக கோவை MP கணபதி குற்றஞ்சாட்டியுள்ளார். அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் சார்பாகவே அவர் பேசியதாகவும், GSTல் உள்ள முரண்களை தெளிவாக எடுத்துரைத்ததாகவும் பாராட்டினார். யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்றால், எதற்காக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அவரது மன்னிப்பு <<14087957>>VIDEO<<>>க்கு பின்னணியில், பெரிய கூட்டமே உள்ளதாகவும் சாடினார்.
Similar News
News December 20, 2025
அக்சரை VC ஆக நியமித்தது ஏன்? அகர்கர்

டி20 WC-க்கான IND அணியின் துணை கேப்டனாக (VC) அக்சர் படேலை அறிவித்தது ஏன் என அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். டி20 VC ஆக இருந்த கில் தற்போது அணியில் இல்லை. எனவே, அவருக்கு முன்பாக அந்த பொறுப்பை ஏற்றிருந்த அக்சர் படேல், தற்போது VC ஆக நியமிக்கப்பட்டுள்ளதாக அகர்கர் கூறியுள்ளார். முன்னதாக, கடந்த ஜனவரியில் நடந்த ENG-க்கு எதிரான டி20 தொடரில், அக்சர் படேல் VC ஆக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 20, 2025
Cinema Roundup: ‘ஜனநாயகன்’ சாட்டிலைட் உரிமம் ₹64 கோடி

*தனது 47-வது படத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா போலீஸாக நடிக்கிறார். *‘அரசன்’ ஷூட்டிங்கில் வெற்றிமாறன், சிம்புவை VJS-ஐ சந்தித்த போட்டோ வைரல். *‘பராசக்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழா ஜனவரி 3-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல். *‘ஜனநாயகன்’ சாட்டிலைட் உரிமையை ₹64 கோடிக்கு ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளதாக தகவல். *ஜீவா நடிக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் கதை முதலில் மம்முட்டிக்கு சொல்லப்பட்டதாம்.
News December 20, 2025
புல்டோசர் கொண்டு சிதைத்த மோடி அரசு: சோனியா

100 நாள் வேலைத்திட்டத்தை பலவீனப்படுத்த கடந்த 11 ஆண்டுகளாக மோடி அரசு முயற்சித்து வந்ததாக சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனா காலத்தில் ஏழைகளின் வாழ்வாதாரமாக இருந்த இத்திட்டத்தை, மத்திய அரசு புல்டோசர் கொண்டு சிதைத்துள்ளது. புதிய VB-G RAM G திட்டம் மூலம் யாருக்கு, எவ்வளவு, எந்த முறையில் வேலை கிடைக்க வேண்டும் என்பதை டெல்லியில் உள்ள அரசே முடிவு செய்யும் என்றும் அவர் சாடியுள்ளார்.


