News September 13, 2024
தேனியில் புதிய ஏ.எஸ்.பி பொறுப்பேற்பு

தூத்துக்குடி டவுனில் பணிபுரிந்து வந்த ஏ.எஸ்.பி கேல்கர் சுப்பிரமணி பாலசந்தரா, தேனி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும், தேனி டிஎஸ்பி-ஆக பணிபுரிந்து வந்த பார்த்திபன் சென்னைக்கு பணியிட மாறுதல் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று (செப்.13) தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் ஏஎஸ்பி கேல்கர் சுப்பிரமணி பாலசந்தரா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News December 13, 2025
தேனி: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்
News December 13, 2025
விவசாய அடையாள அட்டை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தேனி மாவட்டத்தில் பிரதமரின் கவுரத்தொகை வழங்கும் திட்டத்தில் தற்போது 21வது தவணையில் 26,310 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 22,661 பேர் விவசாயிகளுக்கான அடையாள அட்டை பெற பதிவு செய்துள்ளனர். இதில் 3640 பேர் அடையாள அட்டை பதிவு செய்யாமல் உள்ளனர். பதிவு செய்யாவிட்டால் 22வது தவணை கவுரத்தொகை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் அடையாள அட்டை பெற விண்ணபிக்குமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தல்.
News December 13, 2025
தேனியில் தொழிலாளியை மிரட்டிய இளைஞர் கைது

போடி ஜமீன்தோப்பு தெருவை சோ்ந்தவா் கௌதம். இவரை ஒரு வழக்கில் காட்டிக்கொடுத்ததாக அதே பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரனை கல்லால் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் உள்ளது. இந்நிலையில் பிரபாகனிடம் புகாரை திரும்பபெற வலியுறுத்தியுள்ளார். மேலும் பிரபாகரன் சட்டை பையில் பணத்தை எடுத்ததோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸாா் கௌதம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.


