News September 13, 2024
திருவிழாக்கள் நம் உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடியவை: முதல்வர்

மலையாள மொழி பேசும் மக்களால் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் ஓணம் போன்ற பண்டிகைகள், கலாச்சார உறவுகளை மீண்டும் புதுப்பிக்க உறவினர்களுக்கிடேயே ஆரோக்கியமான உறவுகளை வளர்க்கவும் உதவுகின்றன. ஓணம் அத்தப்பூ கோலத்தின் அழகிய நறுமணம் அனைவரது வாழ்விலும் ஒற்றுமையின் மகிழ்ச்சியையும், குடும்பத்தின் அரவணைப்பையும், செழிப்பின் மிகுதியையும் தரட்டும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
மத்திய அமைச்சரை வரவேற்ற புதுவை அமைச்சர்

புதுச்சேரியில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டியா, அர்ஜுன் ராம் மேக்வால், அமைப்பு செயலாளர் சப்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை, அமைச்சர் நமச்சிவாயம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
News September 15, 2025
புதுச்சேரி: காருக்குள் ஆண் சடலம்-போலீசார் விசாரணை

புதுச்சேரி அண்ணா நகர் முதல் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதிக்கு வந்த உருளையன்பேட்டை போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்து காருக்குள் சடலத்தை வைத்தனரா? அல்லது மது போதையில் காருக்குள் சென்று இறந்து கிடந்தாரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 15, 2025
“ஆட்சியாளர்கள் வேகத்திற்கு அரசு நிர்வாகம் இல்லை”-முதல்வர்

புதுச்சேரி அண்ணா சாலையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “அரிக்கன்மேடு பழமையான கலாச்சாரத்தின் பிம்பம். அதை பெரிய சுற்றுலா இடமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆட்சியாளர்களால் எடுக்கும் வேகத்திற்கு இப்பணி இருக்க வாய்ப்பில்லை. அதுமாதிரி அரசு நிர்வாகம் உள்ளது. கடந்த 2003ல் தொடங்கினோம் தற்போது 2025 ஆகிவிட்டது.” என கூறினார்.