News September 13, 2024
நிதி அமைச்சரின் அதிகார ஆணவம்: கார்கே

அன்னபூர்ணா உணவக உரிமையாளரிடம் நடந்து கொண்ட விதம் நிதி அமைச்சர், பாஜகவின் அதிகார ஆணவத்தை காட்டுவதாக மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழை, நடுத்தர மக்களுக்கு வரி தீவிரவாதமும், மோடியின் பணக்கார நண்பர்களுக்கு வரிச்சலுகையும் கொடுப்பதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News January 22, 2026
வைத்திலிங்கம் அதிர்ச்சி.. அதிமுகவில் மீண்டும் சேர்ந்தனர்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று திமுகவில் இணைந்தார். இதனால் அதிருப்தியடைந்த அவரின் தீவிர விசுவாசிகளாகவும், OPS ஆதரவாளர்களாகவும் இருந்த தஞ்சை சண்முகப்பிரபு, சுவாமிநாதன், செல்லதுரை, ஜெகதீசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இன்று EPS-ஐ நேரில் சந்தித்து மீண்டும் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். விரைவில் பிரமாண்ட இணைப்பு விழா நடத்த திட்டமிட்ட வைத்திலிங்கத்திற்கு, இது அதிர்ச்சி அளித்துள்ளது.
News January 22, 2026
உடனே செய்யுங்க: அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளதாக <<18921270>>சுகாதாரத்துறை <<>>எச்சரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பு பதிவான பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், எலிசா பரிசோதனைகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்களை கையிருப்பில் வைத்திருக்கவும், ஹாஸ்பிடல்களில் பிரத்யேக வார்டுகளை அமைக்கவும் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
News January 22, 2026
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதால், ஜனவரி மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், ரேஷன் பொருள்களை வழங்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படும் என கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், எந்த ரேஷன் கடையிலும் பொதுமக்கள் தங்களுக்கான ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். SHARE IT.


