News September 13, 2024

சிசிடிவி பொருத்துதல், பழுது நீக்குதலுக்கான இலவச பயிற்சி

image

தென்காசி மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ராஜேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்ட கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் 19 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய சிசிடிவி பொருத்துதல் பழுது நீக்குதல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு வரும் செப் 18ஆம் தேதி தொடங்கி 13 நாட்கள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

Similar News

News January 10, 2026

தென்காசியில் சிறப்பு முகாம்! தேதி அறிவித்த கலெக்டர்

image

தென்காசி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு ஜன.13 அன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தென்காசி கலெக்டர் ஆபிஸ் வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முன்னிலையில் இந்த முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News January 10, 2026

தென்காசி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இத்தகவலை உடனே SHARE செய்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க.

News January 10, 2026

தென்காசி: திமுகவில் இருந்து விலகுகிறேன்.. பரபரப்பு கடிதம்!

image

கனிம வளங்கள் கேரளாவிற்கு கடையம் பகுதியில் இருந்து அதிகளவில் கொண்டு செல்லப்படுவதாக குறிப்பிட்டு கடையம் பகுதியை சேர்ந்த திமுக மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் சந்திரசேகர் திமுகவில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இப்பகுதியில் சுற்றுச்சூழலை காப்பாற்ற முடியாததால் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!