News September 13, 2024
குமரியில் இரண்டு நாள் டாஸ்மாக் இயங்காது

விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு 14.09.2024 மற்றும் 15.09.2024 ஆகிய தினங்களில் வினாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது. இப்பகுதியிலுள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் மற்றும் FL உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை மேற்படி வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடியும் வரை செயல்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
Similar News
News October 20, 2025
குமரி: கரண்ட் கட்டா? கவலை வேண்டாம்

குமரி மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 19, 2025
குமரியில் முன்னாள் அமைச்சர் உட்பட 25 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே குறும்பனை பஸ் நிலையத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்குவதாக காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டது. அதில் பொதுமக்களுக்கு இடையூறாக தெருமுனை பிரச்சாரம் செய்ததாகவும், காவல்துறை கலைந்து போக கூறியும் போகாததால் முன்னாள் அமைச்சர் பச்சைமால் உட்பட 25 பேர் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News October 19, 2025
குமரியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

குமரி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.