News September 13, 2024
சிவகங்கை: குரூப் 2 தேர்வை நாளை 13,260 பேர் எழுதுகின்றனர்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை குரூப் 2ஏ தேர்வை எழுத மொத்தம் 13ஆயிரத்து 260பேர் நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய 3 இடங்களில் சிவகங்கையில் 22, தேவகோட்டையில் 5, காரைக்குடியில் 16 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 14 நடமாடும் குழுக்கள், 5 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
சிவகங்கை: வயல் வெளியில் சடலம் மீட்பு.!

இளையான்குடி அருகே உள்ள விரையாதகண்டன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (65) வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இளையான்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், அளவிடங்கான் பகுதியிலுள்ள வயல்காட்டு பகுதியில் செல்லத்துரை இறந்த நிலையில் கிடந்தார். மேலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 6, 2025
சிவகங்கை: டிப்ளமோ போதும்., ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை!

சிவகங்கை மக்களே, இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள 64 Junior Manager பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 40 வயகுட்பட்ட டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech படித்தவர்கள் டிச 17க்குள் இங்கு <
News December 6, 2025
சிவகங்கை: கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் ரூ.14,000

சிவகங்கை மாவட்டத்தில், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.14,000 ரொக்கம் 3 தவணைகளில் வழங்கப்படும். இதில் பயன்பெற, தங்களது பகுதிக்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை
அணுகி விவரங்களை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி செய்தி வெளியிட்டுளளார்.


