News September 13, 2024

இரவோடு இரவாக கட்டடம் இடித்து அகற்றம்

image

கரூர் கணபதிபாளையத்தில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் புதிதாக 5 அடி அகலம், 5 அடி நீளம், சுமார் 12 அடி உயரத்திற்கு கோவில் போன்ற அமைப்புடன் கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், சாமானிய மக்கள் நலக்கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிற்கிணங்க இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது.

Similar News

News September 16, 2025

கரூர்: சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்கள்!

image

கரூர்: கடவூர் தாலுகா தரகம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (19) தனது நண்பர் பாலாஜியுடன் இரும்பூதிபட்டி இபி அலுவலகம் அருகே ஸ்கூட்டியில் சென்றபோது, பின்னால் வந்த சிவசக்தி என்பவரின் டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜேஷ்குமாரின் சகோதரர் மணிகண்டன் அளித்த புகாரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

News September 16, 2025

கரூர்: முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

கரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 19.09.2025 அன்று மாலை 2.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. அந்நாளில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.

News September 15, 2025

கரூர்: தேர்வு இல்லாமல்! அரசு வேலை

image

கரூர் மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!