News September 13, 2024
சீத்தாராம் யெச்சூரி உருவப்படத்திற்கு ஆர்.எஸ் பாரதி மரியாதை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி மறைவை ஒட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தி நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
Similar News
News December 19, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
சென்னையில் 8th, 10th, +2, டிகிரி படித்தவரா நீங்கள்?

சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை காலை 10 முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 8th, 10th, +2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 19, 2025
JUST IN: சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று (டிச.19) மாவட்ட தேர்தல் அதிகாரி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் சென்னை மாவட்டத்தில் மொத்தம் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையின்படி, தற்போது 25,79,576 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். SIR-க்கு பின்பு 35.58 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.


