News September 13, 2024
சற்று முன்: தாலிக்குத் தங்கம் திட்ட நிதி குறித்து HC கேள்வி

தாலிக்கு தங்கத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து சென்னை HC கேள்வியெழுப்பியுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த HC, 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அத்திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? எத்தனை பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன? என்பது உள்ளிட்டவை குறித்து கேள்வியெழுப்பியது. பின்னர் அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு ஆணையிட்டது.
Similar News
News October 28, 2025
8-வது ஊதியக்குழுவுக்கு மத்திய அரசு ஒப்புதல்

8-வது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குழு தலைவராக ரஞ்சனா பிரகாஷ் தேசாய், உறுப்பினர் செயலாளராக பங்கஜ் ஜெயின், பகுதி நேர உறுப்பினராக புலக் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவின் பரிந்துரைப்படி 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடையவுள்ளனர். 2026-ம் ஆண்டு ஜன.1 முதல் இக்குழுவின் பரிந்துரைகள் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும்.
News October 28, 2025
இமயமலையில் வெள்ள அபாயம்

கடந்த 14 ஆண்டுகளில், ஜம்மு – காஷ்மீரில் உள்ள இமயமலை பனிப்பாறை ஏரிகள் 50% அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வழித்துறை ஆணையம் சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், கீழ் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் கட்டடங்கள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
News October 28, 2025
பள்ளிக்கரணை விவகாரம்.. தமிழக அரசு விளக்கம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் கட்டுமானங்களுக்கு அனுமதி தரவில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அனுமதி வழங்கியதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என்றும், சதுப்பு நில எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா இடங்களுக்கு மட்டுமே அலுவலர்கள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் TN அரசு கூறியுள்ளது. அங்கு ராம்சார் தலம் அமையும் இடம் இன்னும் புல எண்களுடன் வரையறுக்கப்படவில்லை என்று TN அரசு கூறியுள்ளது.


