News September 13, 2024
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை கருவி

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் அதிநவீன கோபால்ட் புறக்கதிர்வீச்சு சிகிச்சை கருவி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் அதிநவீன கோபால்ட் புறக்கதிர்வீச்சு சிகிச்சை கருவியை நோயாளிகளின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
Similar News
News November 6, 2025
சென்னை: மர்மமான முறையில் இறந்த தொழிலாளி!

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பீஜூல் (31) கோல்டன் ஜார்ஜ் நகரில் கட்டடப்பணி செய்து வந்தார். உடல்நலக்குறைவால் அவர் பணிக்கு செல்லாமல் தன் அறையில் இருந்தார். இரவு சக பணியாளர்கள் திரும்பி வந்த போது, பீஜூலை கழுத்தில் கயிறுடன் தரையில் கிடப்பதை கண்டனர். மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்தார். போலீசார், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 6, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (நவ.05) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News November 5, 2025
சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முன்னாள் படைவீரரின் மனைவி, திருமணமாகாத மகள்கள் அரசு, அரசு சார் நிறுவனங்களில் மூன்று மாத தையற்பயிற்சி முடித்து சான்று பெற்றிருப்பின் அவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 044-22350780 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளவும் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.


