News September 13, 2024
திருவெறும்பூரில் வாலிபர் படுகொலை

திருவெறும்பூர் அடுத்த சர்க்கார் பாளையம் பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சுந்தர் என்பவர் நேற்று இரவு உறவினர் வீட்டு மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதி மிகப் பரபரப்பாக காணப்படுகின்றது. மேலும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
திருச்சி அருகே கோர விபத்து – தலைநசுங்கி பலி

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் ராமையா (80). இவர் இன்று காலை அப்பகுதியில் டீ குடிப்பதற்காக சாலையை கடந்த போது, கரூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராமையா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதபமாக உயிரிழந்தார். இதையடுத்து முசிறி போலீசார் முதியவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
News December 16, 2025
திருச்சி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 16, 2025
திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (டிச.17) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திருச்சி ஈபி ரோடு, தொட்டியம், பாலசமுத்திரம், ஏலூர்பட்டி, காட்டுபுத்தூர், முருங்கை, நாகையநல்லூர், சமுத்திரம், ஸ்ரீராமசமுத்திரம், அரங்கூர், லால்குடி, பின்னவாசல், மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.


