News September 13, 2024
தூத்துக்குடி ஆசிரியர்கள் 2 பேர் பலி

மதுரையில் நேற்று முன்தினம் பெண்கள் விடுதியில் ஃப்ரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா குரங்கணி பகுதியை சேர்ந்த சிங்க துரை என்பவருடைய மனைவி பரிமளா (55), எட்டயபுரம் தாலுகா பேரிலோவன் பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சரண்யா (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Similar News
News December 31, 2025
தூத்துக்குடி போலீஸ் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 புத்தாண்டை முன்னிட்டு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துதல், பைக் ரேஸ், வீலிங், அதிவேக ஓட்டம், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. புத்தாண்டு பாதுகாப்புக்காக 2500 போலீசார், சிசிடிவி, டிரோன் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News December 31, 2025
தூத்துக்குடி எஸ்.பி டிரான்ஸ்பர்.. புதிய எஸ்.பி நியமனம்!

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட்ஜானுக்கு ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியிட மாற்றம் வந்தது. இந்நிலையில் தொடர் பண்டிகை காலங்கள் வந்ததால் அவர் பணி நீட்டிப்பு செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். இப்படியான சூழலில் அவர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது நெல்லை எஸ்.பி சிலம்பரசன் தூத்துக்குடி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
News December 31, 2025
தூத்துக்குடி மக்களுக்கு காவல்துறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெறுவதை முன்னிட்டு இன்று (31.12.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறவுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


