News September 13, 2024

மத்திய அமைச்சர் கும்பகோணம் வருகை

image

மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கும்பகோணம்-விக்கிரவாண்டி நெடுஞ்சாலை ஆய்வு பணிகளுக்காக இன்று காலை 10.35 மணியளவில் கும்பகோணத்துக்கு வருகை தந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வரவேற்றார். இந்நிகழ்வில் எம்.பி-க்கள் சுதா, கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News November 4, 2025

தஞ்சை அருகே பரிதாப பலி

image

பஞ்சநதிக்கோட்டையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (47). மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வந்த இவர் சாமிப்பட்டி பிரிவு சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராவிதமாக மோதியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் செல்லும் வழியிலேயே கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.

News November 4, 2025

தஞ்சை: பிணமாக மிதந்த மாணவர் உடல்!

image

பாபநாசத்தை சேர்ந்தவர் சங்கரபாண்டி(19). இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் குடமுருட்டி ஆற்றின் படித்துறையில் குளித்து போது எதிர்பாராதவிதமாக சங்கரபாண்டி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சங்கரபாண்டியை தேடி வந்தனர். இந்நிலையில் அவரது உடல் ஆற்றில் மிதந்து வர தீயணைப்பு வீரர்கள் அதனை மீட்டனர்.

News November 3, 2025

தஞ்சாவூர்: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!