News September 13, 2024

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

image

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 180 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News November 3, 2025

இன்று முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்

image

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னையில் இன்று நவம்பர் 3ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை சிறப்பு விநியோகம் நடைபெறும் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. ஆலந்தூர், அண்ணா நகர், திரு வி.க. நகர், அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், அம்பத்தூர், வளசரவாக்கம் கோடம்பாக்கம் ஆகிய 15 மண்டலங்களின் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2025

சென்னை: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY HERE

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 3, 2025

சென்னை: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

image

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!