News September 13, 2024

ஈரோடு: 1.41 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளா்கள் பதிவு

image

தேசிய அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பாதுகாப்பினை வழங்க மத்திய அரசு ‘e-sharm’ திட்டத்தை துவங்கியுள்ளது. இதில் 156 வகை தொழிலாளர்கள் பதிவு செய்யலாம். இதில் பதிவுசெய்வோருக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள பெற்றவா்கள் விபத்தில் மரணமடைந்தால் ரூ.2,00,000, உடல் ஊனமுற்றால் ரூ.1,00,000 இழப்பீடு பெறலாம். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 1,41,712 தொழிலாளா்கள் இத்திட்டத்தில் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Similar News

News August 18, 2025

தொழில்நுட்பப் பணிக்கான தோ்வு: 1,737 போ் பங்கேற்பு!

image

ஈரோடு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான, எழுத்துத் தோ்வு ஈரோடு மாவட்டத்தில் காமராஜா் உயா்நிலைப் பள்ளி, சிஎஸ்ஐ ஆண்கள் உயா்நிலைப் பள்ளி, சிக்கய்ய அரசு கல்லூரி போன்ற தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 3208 தேர்வலர்கள் விண்ணப்பித்தனர். இதில் 1,737 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 1,471 போ் தோ்வு எழுதவில்லை.

News August 18, 2025

ஈரோட்டில் முற்றிலும் இலவசம்! APPLY NOW!

image

ஈரோடு மக்களே..தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’5G தொடர்பு தொழில்நுட்ப’ பயிற்சி நமது மாவட்டத்திலேயே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 3652 காலியிடங்கள் உள்ளன. மேலும், இந்தப் பயிற்சியுடன் உங்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதி. விண்ணப்பிக்க இங்கே<> கிளிக்<<>> செய்யவும். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 17, 2025

ஈரோடு: இரு சக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி

image

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பூலப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ வாகனம் மோதிய விபத்தில் பவானி நகராட்சி தூய்மை பணியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்த நிலையில் டெம்போவில் வந்த மோகன் மற்றும் வளர்மதி ஆகிய இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!