News September 13, 2024
புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீா் முகாம்

புதுவை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் உத்தரவின் படி, புதுச்சேரியில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, செப்.15ஆம் தேதி விடுமுறை நாளாக இருப்பதால் வரும் செப்.16ஆம் தேதி காலை 10 மணிக்கு வழுதாவூர் சாலையிலுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் தரைத் தளத்தில் பொதுமக்கள் குறை தீா் முகாம் நடைபெறவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
புதுவை : மனநிம்மதியை தரும் எகிப்திய நடராஜர்

புதுச்சேரியில் உள்ள புதுக்குப்பம் கடற்கரையில் அமைந்துள்ள கர்ணேஷ்வர் நடராஜர் கோயில், பிரமிடு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இது எகிப்திய பிரமிடுகள் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய கோயில் பாணியின் கலவையாக காட்சியளிக்கிறது. இக்கோயிலில் இருக்கும் ஏழு படிகள் உணர்தலைக் குறிப்பதாக கூறுகின்றனர். இக்கோவிலுக்கு சென்று வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும் என நம்பபடுகிறது. இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்!
News August 14, 2025
புதுச்சேரி மக்களே இனி அலைச்சல் இல்லாம APPLY பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே.. முக்கிய அரசு ஆவணங்களை அலைச்சல் இல்லாமல் ஆன்லைனில் விண்ணப்பிக்க எளிய வழி:
பான்கார்டு: onlineservices.proteantech.in
வாக்காளர் அடையாள அட்டை: <
ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in
பாஸ்போர்ட்: www.passportindia.gov.in
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்
News August 14, 2025
ரெஸ்டோபார்களையும் மூட வேண்டும்; ராமதாஸ் அறிக்கை

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், மிஷன் வீதியில் உள்ள ரெஸ்டோ பாரில் கல்லூரி மாணவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, மற்றொருவர் படுகாயம் அடைந்திருப்பதும் வருத்தத்திற்குரியது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புனிதத் தன்மை, கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டுமெனில் அனைத்து ரெஸ்டோ பார்களை உடனடியாக மூட வேண்டும் என தெரிவித்துள்ளார்.