News September 13, 2024
“Goodbye, USA!” : முதல்வர் ஸ்டாலின்

USA பயணத்தை நிறைவு செய்த முதல்வர் ஸ்டாலின், “Goodbye, USA!” என தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 17 நாள் பயணமாக கடந்த 27ஆம் தேதி USA சென்ற அவர் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ₹7,516 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மேலும், அங்குள்ள தமிழர்களை சந்தித்து சிறப்புரையாற்றினார். USA பயணத்தை நிறைவு செய்த அவர், நாளை காலை சென்னை திரும்பவுள்ளார்.
Similar News
News October 26, 2025
FLASH: முன்கூட்டியே உருவாகிறது ‘மொன்தா’ புயல்

வங்கக்கடலில் நாளை உருவாகும் எனக் கணிக்கப்பட்டிருந்த ‘மொன்தா’ முன்கூட்டியே இன்று மாலை 5:30 மணிக்கு புயலாக வலுப்பெறும் என IMD கணித்துள்ளது. மேலும், இது நாளை மறுநாள் காலை தீவிர புயலாக வலுப்பெற்று அன்றே மாலை அல்லது இரவு ஆந்திராவின் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை, திருவள்ளூரில் நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News October 26, 2025
1 – 14 வயது சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆய்வு ஒன்றில் இந்த பாதிப்பு 26% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக TN-ல் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக, அமைச்சர் மா.சு., அறிவித்துள்ளார். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதில் இது முக்கிய பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News October 26, 2025
சைலண்ட்டாக வாட்ச் பண்ணும் விஜய்

விஜய், பிஹார் தேர்தல் நிலவரத்தை கூர்ந்து கவனிக்கிறாராம். குறிப்பாக, முதல்முறையாக களத்தில் குதித்திருக்கும் PK-வின் ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு, முகவர்களை நியமித்த விதம், வேட்பாளர்கள் சிலர் வாபஸ் பெற்ற பின்னணி போன்றவற்றை கூர்மையாக கவனிக்கிறாராம். தமிழகத்தில் தவெக தனித்து நிற்பது உறுதியானால் எத்தகைய சிக்கல்கள் உருவாகும் என்பதை இதன்மூலம் அவர் தெரிந்துகொள்ள விரும்புவதாக கூறுகின்றனர்.


