News September 13, 2024
போதகாட்டில் மனைவிய அடித்துக் கொன்ற கணவன் கைது

பாப்பிரெட்டிபட்டி அடுத்த போதகாடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ். இவரது மனைவி ஆர்த்தி கடந்த 10-ம் தேதி மர்மமாக இறந்தார். இதுகுறித்து அரூர் டிஎஸ்பி ஜெகநாதன் விசாரணை மேற்கொண்டார். அப்போது குடும்பத்தகராறில். மனைவி ஆர்த்தியை கணவன் கோவிந்தராஜ் அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. எனவே, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அவரை கைது செய்து அரூர் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 14, 2025
தர்மபுரி: இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மற்றும் அரூர்க்கு (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தருமபுரி தலைமை அதிகாரியாக சிவராமன், அரூர் கரிகால் பாரி சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மற்றும் அரூர் சுற்றியுள்ள அனைத்து காவல் நிலையங்களும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
News August 14, 2025
தர்மபுரியில் இலவசம்! மிஸ் பண்ணிடாதீங்க

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராமப்புறப் பெண்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி தொடங்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க!
News August 14, 2025
தருமபுரி: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தர்மபுரி, நாளை சுதந்திர தின விழா நடைபெறுவதை ஒட்டி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அழைப்பு விடுத்துள்ளனர். காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தும், காவல் துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றும் சிறப்பிக்க உள்ளார்கள். பொதுமக்கள் இவ்விழாவிற்கு வருக தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.