News September 13, 2024
ஒவ்வொரு பகுதியாக மின் விநியோகம் வழங்கல்

மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு பிரச்னையை சரி செய்ததால், ஒவ்வொரு பகுதியாக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டது. உங்க ஏரியாவில் கரண்ட் வந்துடுச்சா? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News September 16, 2025
சென்னை: உங்க ஏரியால எவ்வளவு மழை தெரியுமா?

சென்னை மாவட்டத்தில் நேற்று (செப் 15) காலை 8:30 முதல் இன்று காலை 6:30 மணி வரை தாலுகா வாரியாக அயனாவரம் – 68, எழும்பூர் – 42.8, கிண்டி – 27.4, மாம்பலம் – 59.6, மயிலாப்பூர் – 82.6, பெரம்பூர் – 4.3, புரசைவாக்கம் – 22, தண்டையார்பேட்டை – 61, ஆலந்தூர் 10.9, அம்பத்தூர் – 35, சோழிங்கநல்லூர் – 71.5 என மி.மீட்டரில் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
News September 16, 2025
சென்னை: மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி பலி

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் ரமேஷ் (48) என்பவர் பயணம் செய்தார்.
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நுழைந்தபோது, ரமேஷ் ஓடும் ரயிலில் இருந்து தவறி நடைமேடையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 16, 2025
சென்னையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

சென்னையில் 10 இடங்களில் இன்று “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
திருவொற்றியூர், மணலி, இராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் முகாம் நடைபெறுகிறது. முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.