News September 12, 2024
வடிவேலு படங்களின் போஸ்டர் வெளியானது

நடிகர் வடிவேலுவின் பிறந்த நாளையொட்டி அவர் நடித்துவரும் ‘மாரீசன்’, ‘கேங்கர்ஸ்’ படங்களின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சுதீஷ் சங்கர் இயக்கும் ‘மாரீசன்’ படத்தில் ஃபகத் பாசில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. ‘கேங்கர்ஸ்’ படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் சுந்தர்.சி உடன் இணைந்து நடித்து வருகிறார் வடிவேலு.
Similar News
News December 17, 2025
பிரபல நடிகர் கேன்சரால் காலமானார்

கேன்சர் என்ற கொடிய நோய்க்கு ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு தெரியாது என்பார்களே அது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் கில் ஜெரார்ட்(82) கேன்சர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்ததாக அவரது மனைவி ஜேனட் அறிவித்துள்ளார். ‘ஸ்டார் வார்ஸ்’, ‘ஏர்போர்ட் 77’ உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் மனங்களை கவர்ந்த அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News December 17, 2025
உங்க மூளை இளமையாக இருக்கணுமா? இத செய்யுங்க

முதுமையை நாம் தடுக்க முடியாது. ஆனால், மூளையை சுறுசுறுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க நம்மால் முடியும் என்கிறது புளோரிடா பல்கலையின் ஆய்வு. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களின் மூளை, அவர்களின் உண்மையான வயதைவிட 8 வயது இளமையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நல்ல தூக்கம், புகைப்பழக்கத்தை தவிர்ப்பது & டென்ஷனை கட்டுப்படுத்துவது ஆகியவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறதாம்.
News December 17, 2025
காந்தி கொலையில் RSS-க்கு தொடர்பு இல்லை: தமிழிசை

OPS – TTV இணைப்பை டெல்லி தலைமை பார்த்துக்கொள்ளும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் சிலர் திட்டமிட்டு அரசியல் செய்வதாகவும் சாடினார். மேலும், மகாத்மா காந்தி கொலையில் RSS-க்கு தொடர்பு இல்லை என்பதை கோர்ட்டே கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். MGNREGA திட்டம் VB-G RAM G என பெயர் மாற்றும் மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


