News September 12, 2024
மதுரையில் சிலைகளுக்கு கம்பிவேலி அமைக்க கோரிக்கை

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழர்களின் வீர விளையாட்டுக்களை அடையாளப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் சிலம்பம் விளையாட்டு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைகளை சுற்றி தடுப்புகள் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மர்ம நபர்கள் இரவு நேரங்களில் சிலைகளை சேதப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
Similar News
News August 25, 2025
மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்தடை

மதுரையில் நாளை (26)ம் தேதி பாரமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
பழங்காநத்தம் அக்ரஹாரம், பசும்பொன் நகர், பத்திரப்பதிவு அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் முதல் 6 தெருக்கள், நேரு நகர், மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன் சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், சொரூப் நகர், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோவில் மேலும் அறிய <
News August 25, 2025
நகை கடையில் கொள்ளை அடித்த 4 சிறுவர்கள் கைது

மதுரை தெற்கு வாசல் பகுதியில் நகை கடை வைத்துள்ளவர் ரங்கராஜ் 65. அவரது கடையில் கடந்த சில நாட்களுக்கு முன் பூட்டு உடைக்கப்பட்டு வெள்ளிப் பொருட்களும், பணமும் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், 4 சிறுவர்கள் கடையின் பூட்டை உடைத்து பணம்,, வெள்ளி பொருட்களையும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து கடையில் திருடிய 4 சிறுவர்களை கைது செய்தனர்.
News August 24, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (ஆக.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாருக்கேனும் அவர்களின் உதவி தேவைப்பட்டால், அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர உதவிக்கு 100 தொடர்பு கொள்ளலாம்.