News September 12, 2024
தஞ்சை விக்கிரவாண்டி சாலை பணிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு

தஞ்சை விக்கிரவாண்டி நான்கு வழி சாலை பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனை நாளை ஆய்வு செய்ய, போக்குவரத்து துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கும்பகோணம் வருகை தர உள்ளர். பின்னர் ஜெகநாதப்பெருமாள் கோயிலில் தரிசனம் செய்து
தஞ்சையிலிருந்து சோழபுரம் வரை சாலை பணி ஆய்வும்,
சோழபுரத்திலிருந்து சேத்தியாத்தோப்பு பகுதி வரை நான்கு வழி சாலை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்.
Similar News
News September 15, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 15, 2025
தஞ்சாவூர்: தோஷங்களுக்கு தீர்வு கொடுக்கும் கோயில்!

தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள மூலை ஆஞ்சநேயர் பற்றி தெரியுமா? படிப்பில் தடை, திருமணத்தடை, வியாதிகள் போற்றவற்றிக்கு, மூலை அனுமாரை மூல நட்சத்திரத்தில் 18 அமாவாசைகள் 18 முறை வலம் வந்து மூலவருக்கு 18 எலுமிச்சை பழங்களான மாலையை சாற்றி வழிபட்டால் கிரக, வாஸ்து தோஷங்கள் நீங்கும். மார்கழியில் 108 முறை வலம் வந்து மூலை அனுமாரை வழிப்பட்டால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது மக்களின் ஐதீகம். SHARE IT.
News September 15, 2025
மருத்துவமனையில் ஆய்வு ஆட்சியர் மற்றும் எஸ்பி

தஞ்சாவூரில் இராசாமிராசுதார் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து, சிகிச்சை பெறவரும் பொதுமக்களுக்கு வழிகாட்டுதல் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.