News September 12, 2024
சீதாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்ட குழு சார்பாக, கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு நாளை(செப்.,13) மாலை 5 மணிக்கு பாளை., LIC அலுவலகம் முன்பிருந்து இரங்கல் ஊர்வலம் தொடங்கி லூர்து நாதன் சிலை அருகில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இன்று நெல்லை கட்சி அலுவலகத்தில் அவரது படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினர்.
Similar News
News December 26, 2025
நெல்லையில் மீண்டும் ஹெலிகாப்டர் சவாரி வாய்ப்பு

நெல்லை மாநகரை ஆகாயத்தில் பறந்து சுற்றி பார்க்கும் ஹெலிகாப்டர் சவாரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பயணித்து அனுபவித்து மகிழ்ந்தனர். இந்த ஹெலிகாப்டர் சவாரி மீண்டும் நெல்லை மக்களை மகிழ்விக்க வருகிறது. தைப்பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை 5 நாட்கள் நெல்லை மாநகரில் ஹெலிகாப்டர் சவாரி நிகழ்ச்சி அதிகாரிகள் அனுமதியுடன் நடைபெற உள்ளது.
News December 26, 2025
நெல்லை: ஆசிரியர் எழுத்து தேர்வு; சிஇஓ முக்கிய தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் 27ம் தேதி சனிக்கிழமை 6 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
1526 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு விதிகளை தேர்வர்கள் பின்பற்ற வேண்டும் என நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.