News September 12, 2024
BSNL 4G: பயனாளர்களுக்கு புது சிக்கல்

BSNL 4G சேவை தற்போது பயன்படுத்தப்படும் 4G போன்களில் வேலை செய்யாது என தகவல் வெளியாகியுள்ளது. 4G சேவைக்காக BSNL க்கு 700M HZ, 2100 M HZ ஆகிய 2 அலைவரிசையை அரசு ஒதுக்கியுள்ளது. இதில், 700M HZ அலைவரிசையை BSNL பயன்படுத்துகிறது. இது 5G சேவைக்கானது என்பதால் தற்போதைய 4G போனில் BSNL 4G கிடைக்காது.700MHZ கொண்ட 5G போனில் தான் கிடைக்கும். எனவே போனை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Similar News
News November 3, 2025
ஒரு பூத்திலும் RJD வெல்லக் கூடாது என காங்., திட்டம்: மோடி

பிஹாரில் பரப்புரை செய்த PM மோடி, ஒரு குடும்பம் (RJD ) மாநிலத்திலேயே அதிக ஊழல் செய்த குடும்பம்; மற்றொரு குடும்பம் (காங்.,) நாட்டிலேயே அதிக ஊழல் செய்த குடும்பம் என்று கடுமையாக சாடினார். CM வேட்பாளரில் காங்கிரஸுக்கு உடன்பாடு ஏற்படவில்லை; இதனால், RJD காங்கிரஸுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளது. அதேபோல் எந்த பூத்திலும் RJD வெல்லக்கூடாது என காங்., முடிவு செய்துள்ளதாகவும் விமர்சித்தார்.
News November 3, 2025
ஆச்சரியப்பட வைக்கும் விலங்குகள்

நீச்சல் என்பது கடல் விலங்குகளின் இயற்கையான பண்பாக கருதப்படுகிறது. இருப்பினும், நிலத்தில் வாழும் பல விலங்குகள் நன்றாக நீந்தும் திறன் கொண்டவை. அவை என்னென்ன விலங்குகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களை ஆச்சரியப்பட வைத்த விலங்கு எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 3, 2025
இந்திய அணியை பாராட்டிய அரசியல் தலைவர்கள்

இந்திய மகளிர் அணியின் வெற்றி எண்ணற்ற இளம் பெண்களை அச்சமின்றி கனவு காண வைக்கும் என்று ராகுல் காந்தி வாழ்த்து கூறியுள்ளார். மகளிர் அணியின் தைரியம், மன உறுதி ஆகியவை இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார். இதே போல மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்னாவிஸ், ரேகா குப்தா, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


