News September 12, 2024
புதுக்கோட்டை அருகே குளத்தில் வாலிபர் சடலம்

திருமலைராயன் சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சூளைமேடு பகுதியில் உள்ள சேத்தி குளத்தில் வாலிபர் சடலம் கிடப்பதாக கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு, கொலையா? தற்கொலையா? என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் போலீசார் இந்த நபர் எந்த கிராமத்தை சேர்ந்தவர் என பொது மக்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News August 22, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10, மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News August 22, 2025
புதுகை: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு !

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய 6 கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <
News August 22, 2025
அண்ணா சிலை கூண்டு மீது படுத்து உறங்கிய மது பிரியர்

புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகே அண்ணா சிலை உள்ளது. இந்த அண்ணா சிலையை சுற்றி கூண்டு அமைக்கப்பட்டு பாதுகாப்பாவுடன் உள்ள நிலையில் மது போதையில் ஏறி இளைஞர் ஒருவர் கூண்டின் மேல் பகுதியில் படுத்து உறங்க ஆரம்பித்தார். இதனை கவனித்த பாதுகாப்பில் இருந்த போலீசார் உடனே அந்த வாலிபரை இறங்கச் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.