News September 12, 2024
திண்டுக்கல்: இனி நீங்கள் சொல்லும் இடத்தில் பஸ் நிற்கும்!

திண்டுக்கல் மண்டலம் மூலம் இயக்கப்படும் அனைத்து தொலைதூர புறநகர் பேருந்துகளும் இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் கேட்கும் நிறுத்தத்தில் நிறுத்திச் செல்ல தடத்தில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தி பொது மேலாளர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மேலும் பயணிகளிடம் புகார் பெறும்பட்சத்தில் ஓட்டுநர், நடத்துநர் மீது துறைசார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மேலாளர் எச்சரித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
கீரனுார் அருகே செங்கல் சூளையில் மரணம் போலீசார் அறிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையச் சரகம் தும்பலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் செங்கல் சேம்பரில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு ஆண் இறந்து கிடப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது. மேற்படி தகவலின் அடிப்படையில் கீரனூர் காவல் ஆய்வாளர் சம்பவயிடம் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த மரணமானது மேற்படி இருவருக்கும் இடையே காதல் தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட மரணம் என்று விசாரணையில் தெரியவருகிறது.
News August 11, 2025
கீரனூர் அருகே கொலை சிறுமி உட்பட மூன்று பேர் கைது!

பழனியை அடுத்த கீரனூர் அருகே தும்மலபட்டியில் அருகே தேவி சேம்பர் செங்க சூலையில் தும்மலபட்டியை சேர்ந்த மகுடீஸ்வரன் மகன் சரவணகுமார்(24) என்ற வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வட மாநிலத்தை சேர்ந்த சிறுமி, 19 வயது இளம்பெண் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய 3 பேரை கீரனூர் ஆய்வாளர் தென்னரசன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 11, 2025
திண்டுக்கல்: கேட்ட வரம் தரும் 700 ஆண்டு கால கோயில் !

திண்டுக்கல்: ஆத்தூர் காமராஜர் அணை அருகே கரடு முரடான மலைப் பாதையில் அமைந்துள்ள சடையாண்டி மலைக்கோயில் 700 ஆண்டுகாலம் பழமையானது. இந்தக் கோயிலுக்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். குகைக் கோயிலான இந்தக் கோயிலில் எந்த வேண்டுதலை வைத்தாலும் நிறைவேறும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. திண்டுக்கல் மக்களே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!