News September 12, 2024
உறுதி செய்த கள்ளக்குறிச்சி ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் சிலர் பதவி காலம் 2024ஆம் ஆண்டுடன் முடிவடைவதாக தகவல் பரவியது. ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழக தேர்தல் ஆணையருக்கு மனு அளித்தனர். பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி எங்களுக்கு ஐந்தாண்டுகள் வரை பதவி காலம் உறுதி செய்ய வேண்டும் என கூறி இருந்தனர்.இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் ஐந்தாண்டு காலம் பதவியை உறுதி செய்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
Similar News
News September 5, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.1,50,000 சம்பத்தளத்தில் அரசு வேலை!

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகு வேலைக்கு பல்வேறு பணிகளுக்காக இப்போது விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. அதன்படி இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், நேர்காணலில் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த பணிக்கு ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
News September 5, 2025
கள்ளக்குறிச்சி:ரயில் நிலையத்தில் சடலம் மீட்பு

உளுந்தூர்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று சடலம் மீட்கப்பட்டது, விசாரணையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்று தெரியவந்துள்ளது. இவர் கடலூர், வேப்பூரில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News September 5, 2025
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் விலை நிலவரம்

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று செப்டம்பர் 5காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 1கிலோ மதிப்பீட்டு தக்காளி ரூபாய் 30 முள்ளங்கி ரூபாய் 30 இஞ்சி ரூபாய் 100 அவரைக்காய் ரூபாய் 60 80 கத்திரிக்காய் ரூபாய் 40 60 பாகற்காய் நாற்பது சுரைக்காய் ரூபாய் 25 பாகல் ரூபாய் 30 பச்சை மிளகாய் 50 புதினா கட்டு ரூபாய் உருளைக்கிழங்கு ரூபாய் 30 என்று விற்பனையாகிறது என நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.