News September 12, 2024
இராமநாதபுரம் மாவட்டத்தில் 54 குழந்தை திருமணங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனவரி முதல் இதுவரை குழந்தை திருமணம் தொடர்பாக 72 தொலைபேசி புகார்கள் வந்ததில் 54 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 15 திருமணங்கள் நடந்து முடிந்த பின்னர் தகவல் கிடைத்ததால் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக 8 குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 29, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ராமநாதபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் : ராமநாதபுரம் நகராட்சி – வள்ளல் பாரி, நடுநிலைப்பள்ளி, முதுகுளத்தூர் வட்டாரம் – சமுதாயக்கூடம், மைக்கேல்பட்டினம், கடலாடி வட்டாரம் – பஞ்சாயத்து அலுவலக கட்டிடம், இளம்செம்பூர் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது. மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
News August 29, 2025
ராமநாதபுரம் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்!

ராமநாதபுரம் மக்களே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . பயனுள்ள தகவல் உடனே SHARE பண்ணுங்க
News August 29, 2025
ராம்நாடு: இளைஞர்களே சூப்பர் வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க..

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி 3, கடலாடி 6, கீழக்கரை 2, முதுகளத்தூர் 4, திருவாடானை 1, பரமக்குடி 3, ராமேஸ்வரம் 1, RS மங்களம் 9 என 29 கிராம உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடைசி தேதி- செப். 7; எழுத்துதேர்வு- அக். 8; நேர்முகத்தேர்வு- அக். 23; 10th முடித்தவர்கள் <