News September 12, 2024
பஞ்சாயத்து தலைவர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே கொங்கன்குளம் கிராமத்தில் போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது கொங்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் தனது கோழிப்பண்ணையில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், பட்டாசு தயாரித்த பாலமுருகன் மீது வழக்கு பதிந்து பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News October 20, 2025
விருதுநகரில் 61 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்

விருதுநகரில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கம், சிஐடியு ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் இணைந்து தொடர்ந்து 61 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சருடன் சிஐடியு தொழிற்சங்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 61 நாட்கள் நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
News October 19, 2025
விருதுநகருக்கு தீபாவளியன்று கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென், மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும்(அக்.19, 20) விருதுநகர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட முடியுமா என அனைவரின் மனதிலும் கேள்வி எழுந்துள்ளது.
News October 19, 2025
விருதுநகர்: ஊராட்சி செயலர் பணி., தேர்வு இல்லை

விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!