News September 11, 2024
தஞ்சையில் 300 பேருக்கு வேலை வாய்ப்பு
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது மணக்கரம்பையில் இரண்டு ஏக்கர் பரப்பளவில், ஆறு மாடியில் பல்வேறு வசதிகளைக் கொண்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா (APM IT Park) அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகி இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
தஞ்சை ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர்
தஞ்சை அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (நவ.20) மாணவர்கள் கண் எதிரே கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். மேலும் இச்சம்பவத்தை ‘மிருகத்தனமானது’ என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், குற்றவாளிக்கு உரிய தணடனை பெற்று தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
News November 20, 2024
தஞ்சை அருகே ஆசிரியை கொலை: பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை
தஞ்சை அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (நவ.20) காலை ஆசிரியை ரமணி என்பவர் மாணவர்கள் கண்முன்னே கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இதனையடுத்து அப்பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
ஆசிரியை குத்திக்கொலை: அமைச்சர் கண்டனம்
தஞ்சையில் ஆசிரியை ரமணியை குத்தி கொன்றவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ‘ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது, மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளி ஆசிரியை மீதான தாக்குதலை கண்டிக்கிறோம். ஆசிரியை ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு இரங்கல்’ என அவர் தெரிவித்தார்.