News September 11, 2024
மரத்தில் அதிவேகமாக மோதிய பைக்: இளைஞர் பலி

சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த செட்டிப்புண்ணியம் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்டன் ஜெரினோ(30). இவர், நேற்றிரவு செட்டிப்புண்ணியம் அரசு பள்ளி அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, செட்டிபுண்ணியம் – சிங்கப்பெருமாள் கோவில் சாலையில் உள்ள ஏரி அருகே சாலை வளைவில் திரும்பும்போது, கருவேல மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாம்பரம் போலிசார் விசாரிக்கின்றனர்
Similar News
News August 24, 2025
காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆக.25-ம் தேதி காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை குறித்து மனு அளிக்கலாம். இது போன்ற முக்கிய அறிவிப்புகளை SHARE பண்ணுங்க.
News August 24, 2025
கஞ்சா விற்ற 3 பேர் கைது

காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை அருகே கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முஸ்தபா, இம்தியால், ஹேமநாதன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
News August 24, 2025
காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு அடையாள அட்டை!

ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் திருப்பெரும்புதூர் சார் ஆட்சியர் ந.மிருநாலினி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் எம்.ஹிலாரினா, ஜோஷிடா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.