News September 11, 2024
தங்கம் விலை ₹280 உயர்வு

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ₹280 அதிகரித்துள்ளது. கடந்த 4 நாள்களாக தங்கம் விலை மாற்றமில்லாமல் இருந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹53,720ஆக விற்கப்படுகிறது. 1 கிராம் தங்கம் விலை இன்று ₹35 உயர்ந்து ₹6,715ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ₹500 உயர்ந்து, ₹91,500க்கு விற்கப்படுகிறது. SHARE IT
Similar News
News August 17, 2025
நான் இருக்கிறேன்.. BCCI-க்கு சாம்சன் அனுப்பிய செய்தி!

ஆசிய கோப்பை நெருங்கி வரும் நிலையில், அணியில் இடம்பெறுவோமா என்ற கேள்விகளுக்கு மத்தியில், சஞ்சு சாம்சன் ஒரு செய்தியை தேர்வுக்குழுவிற்கு அனுப்பியுள்ளார். கேரள கிரிக்கெட் சங்கம் நடத்திய உள்ளூர் டி20 போட்டியில் அரைசதம் அடித்து, KCA செயலாளர் லெவன் அணிக்கு வெற்றிக்கு உதவியுள்ளார். 36 பந்துகளில் 54 ரன்களை விளாசி, தான் இன்னும் ஃபார்மில் தான் இருக்கிறேன் எனும் செய்தியை தேர்வுக்குழுவிற்கு அனுப்பியுள்ளார்.
News August 17, 2025
அடுத்த ED ரெய்டு தி.மலையில்.. EPS சொன்ன ஹிண்ட்

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று நடந்த ED ரெய்டு TN அரசியல் களத்தை ஆட்டி படைத்துள்ளது. தென் மாவட்டங்களில் 4 முக்கிய அமைச்சர்கள் தொடர்பான புகார்களை ED தூசு தட்டுவதாக கடந்த மாதமே தகவல் வெளியானது. அந்த வகையில், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமியிடம் முதலில் ஆட்டம் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அடுத்த ரெய்டு தி.மலையில் நடக்கலாம் என EPS, இன்றைய பரப்புரையில் பேசியுள்ளார்.
News August 17, 2025
‘புஷ்பா’ படத்தை சாடிய ஏ.ஆர்.முருகதாஸ்?

இன்றைய சினிமாவில் சட்டவிரோத செயல்களை செய்யும் கேரக்டர்கள் தான் ஹீரோவாக உள்ளதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். கெட்டது செய்யும் ஹீரோக்கள் வெல்ல வேண்டும் என இன்றைய ரசிகர்கள் விரும்புவதாகவும், இந்த மனநிலை பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார். சந்தன மரக் கடத்தலில் ஈடுபடும் ஹீரோவை கொண்டாடிய ‘புஷ்பா’ படத்தைதான் அவர் சாடியுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.