News September 11, 2024

கல்லணையில் 15,004 கன அடி தண்ணீர் திறப்பு

image

கல்லணையில் இன்று காலை காவேரி ஆற்றில் 4504 கனஅடி தண்ணீரும், வெண்ணாற்றில் 6502 கனஅடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 2513 கனஅடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 1515 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 15004 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதுபோல மேட்டூரில் 114.14 அடியாகவும், 84.431 டிஎம்சி தண்ணீர் இருப்பாக உள்ளது.

Similar News

News August 21, 2025

தஞ்சை: விநாயகா் சிலைகள் அமைக்க அனுமதி கட்டாயம்

image

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஆக.20) நடைபெற்றது. இதில், விநாயகா் சதுா்த்தியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய கோட்டாட்சியரின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

News August 21, 2025

தஞ்சை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி ?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 21, 2025

தஞ்சை: மனைவியை கொலை செய்த கணவன் கைது

image

கும்பகோணம் அருகே பவுண்டரீகபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (45). இவருடைய மனைவி ஜெய சித்ரா. கடந்த 2016-ம் ஆண்டு குடும்ப தகராறு ஒன்றில், ஜெயசித்தராவை மோகன்ராஜ் கம்பியால் தலையில் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்கு பதிந்த போலீசார், அவரை தேடி வந்தனர். இந்நிலையில் 9 ஆண்டுகள் கழித்து, தலைமறைவாக இருந்த மோகன்ராஜை திருநீலக்குடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

error: Content is protected !!