News September 11, 2024
நியோமேக்ஸ் மோசடி – 129வது நபர் கைது

மதுரையை மையமாக கொண்டு இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மக்களிடம் பல கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரில் இந்நிறுவன இயக்குநர்கள், துணை நிறுவன இயக்குநர்கள் என 128 பேர் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று (செப்.10) ஒத்தக்கடையைச் சேர்ந்த நியோமேக்ஸ் துணை நிறுவன இயக்குனர் சரவணசுந்தரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News August 25, 2025
மதுரை மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

மதுரை மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம் முதல்வரின் முகவரி துறையில் <
News August 25, 2025
மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்தடை

மதுரையில் நாளை (26)ம் தேதி பாரமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
பழங்காநத்தம் அக்ரஹாரம், பசும்பொன் நகர், பத்திரப்பதிவு அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் முதல் 6 தெருக்கள், நேரு நகர், மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன் சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், சொரூப் நகர், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோவில் மேலும் அறிய <
News August 25, 2025
நகை கடையில் கொள்ளை அடித்த 4 சிறுவர்கள் கைது

மதுரை தெற்கு வாசல் பகுதியில் நகை கடை வைத்துள்ளவர் ரங்கராஜ் 65. அவரது கடையில் கடந்த சில நாட்களுக்கு முன் பூட்டு உடைக்கப்பட்டு வெள்ளிப் பொருட்களும், பணமும் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், 4 சிறுவர்கள் கடையின் பூட்டை உடைத்து பணம்,, வெள்ளி பொருட்களையும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து கடையில் திருடிய 4 சிறுவர்களை கைது செய்தனர்.