News September 11, 2024

தஞ்சை பெரிய கோவில் முன்பு தரைவிரிப்பு

image

தஞ்சையில் கடும் வெப்பத்தால் பெரிய கோவில் தொலைவு வாயிலான மராட்டா நுழைவு வாயிலில் இருந்து மெயின் சாலை வரை 100 மீட்டர் தூரத்தைக் கடக்க பக்தர்கள், வயதானவர்கள், குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனை உணர்ந்த முரசொலி எம்.பி, பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் கோவிலின் முன் பகுதிகளில் தரை விரிப்புகளை ஏற்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று கோவிலின் முன்பாக தரை விரிப்புகள் அமைக்கப்பட்டது.

Similar News

News November 20, 2024

தஞ்சை ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர்

image

தஞ்சை அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (நவ.20) மாணவர்கள் கண் எதிரே கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். மேலும் இச்சம்பவத்தை ‘மிருகத்தனமானது’ என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், குற்றவாளிக்கு உரிய தணடனை பெற்று தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

News November 20, 2024

தஞ்சை அருகே ஆசிரியை கொலை: பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை

image

தஞ்சை அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (நவ.20) காலை ஆசிரியை ரமணி என்பவர் மாணவர்கள் கண்முன்னே கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இதனையடுத்து அப்பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

ஆசிரியை குத்திக்கொலை: அமைச்சர் கண்டனம்

image

தஞ்சையில் ஆசிரியை ரமணியை குத்தி கொன்றவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ‘ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது, மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளி ஆசிரியை மீதான தாக்குதலை கண்டிக்கிறோம். ஆசிரியை ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு இரங்கல்’ என அவர் தெரிவித்தார்.