News September 11, 2024
30 குண்டுகள் முழங்க மரியாதை

திருப்புத்துார் அருகே குருவாடிப்பட்டி ஆரோக்கியசாமி மகன் செபஸ்டின்ஆண்டனி (29). இவர் புதுக்கோட்டை ஆயுதப்படை பிரிவில் போலீசாக இருந்தார். இவர் நேற்று கல்லலில் நடந்த உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு, டூவீலரில் புதுக்கோட்டை நோக்கி வந்தார். திருமயம் அருகே சென்ற போது, எதிரே வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே போலீசார் பலியானார். இவரது உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
Similar News
News August 13, 2025
சிவகங்கையில் நிலம் வாங்குறீங்களா? மக்களே உஷார்!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. சிவகங்கை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<
News August 13, 2025
சிவகங்கை: உதவி எண்கள் SAVE IT..!

தமிழக அரசு அறிவித்துள்ள இந்த உதவி எண்களை SAVE பண்ணி வச்சிக்கோங்க
குழந்தைகள் பாதுகாப்பு – 1098
பெண்கள் பாதுகாப்பு – 191
காவல் மற்றும் ஆம்புலன்ஸ் – 112
இணைய பாதுகாப்பு – 1930
தேவையான அவசர காலங்களில், இந்த எண்களை தொடர்பு கொண்டால் உடனடியாக உதவி கிடைக்கும். இந்த தகவலை SHARE பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க..!
News August 13, 2025
சிவகங்கை: மதுபான கடைகள் மூடல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும். மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.