News September 10, 2024
பழனியில் திடீரென போலீசார் குவிப்பு

பழனி அருகே பாலசமுத்திரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் இஸ்லாமிய மூதாட்டி உயிரிழந்துள்ளார். அவரது உடலை விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த கோவில் வழியாக கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்புடன் மூதாட்டியின் உடலை கொண்டு சென்றனர்.
Similar News
News August 11, 2025
திண்டுக்கல்: கேட்ட வரம் தரும் 700 ஆண்டு கால கோயில் !

திண்டுக்கல்: ஆத்தூர் காமராஜர் அணை அருகே கரடு முரடான மலைப் பாதையில் அமைந்துள்ள சடையாண்டி மலைக்கோயில் 700 ஆண்டுகாலம் பழமையானது. இந்தக் கோயிலுக்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். குகைக் கோயிலான இந்தக் கோயிலில் எந்த வேண்டுதலை வைத்தாலும் நிறைவேறும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. திண்டுக்கல் மக்களே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 11, 2025
சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
திண்டுக்கல்: 500 அரசு உதவியாளர் வேலை: APPLY NOW

திண்டுக்கல் மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <