News September 10, 2024

9007 மெ.டன் உரம் இருப்பு : ராமநாதபுரம் ஆட்சியர் தகவல்

image

நடப்பு சம்பா பருவத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், அனைத்து தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா-5100 மெ.டன், டி.ஏ.பி-1495 மெ.டன், பொட்டாஷ்-109 மெ.டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2206 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் உரங்கள் 97 மெ.டன் என 9007 மெ.டன் உரங்கள் இருப்பு உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News August 29, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

ராமநாதபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் : ராமநாதபுரம் நகராட்சி – வள்ளல் பாரி, நடுநிலைப்பள்ளி, முதுகுளத்தூர் வட்டாரம் – சமுதாயக்கூடம், மைக்கேல்பட்டினம், கடலாடி வட்டாரம் – பஞ்சாயத்து அலுவலக கட்டிடம், இளம்செம்பூர் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது. மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News August 29, 2025

ராமநாதபுரம் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்!

image

ராமநாதபுரம் மக்களே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . பயனுள்ள தகவல் உடனே SHARE பண்ணுங்க

News August 29, 2025

ராம்நாடு: இளைஞர்களே சூப்பர் வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க..

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி 3, கடலாடி 6, கீழக்கரை 2, முதுகளத்தூர் 4, திருவாடானை 1, பரமக்குடி 3, ராமேஸ்வரம் 1, RS மங்களம் 9 என 29 கிராம உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடைசி தேதி- செப். 7; எழுத்துதேர்வு- அக். 8; நேர்முகத்தேர்வு- அக். 23; 10th முடித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.11,100 – ரூ.35,100; சொந்த ஊரில் அரசு வேலை. மிஸ் பண்ணாதீங்க. SHARE பண்ணுங்க

error: Content is protected !!