News September 10, 2024

ஆற்றில் மூழ்கி இறந்த 5 பேருக்கு நிவாரணம் அறிவிப்பு

image

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சை அருகே நடைபெற்ற மாதா கோயில் திருவிழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து பிராங்க்ளின் (23), ஆண்டோ (20) கிஷோர் (20), கலையரசன் (20) மனோகரன் (19) சென்றுள்ளனர். இவர்கள் அப்பகுதியில் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது நீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

Similar News

News July 6, 2025

கமல்ஹாசனுக்கு அதிரடி தடை: கர்நாடக கோர்ட்

image

இனி கன்னட மொழி, கலாசாரம், இலக்கியம் குறித்துப் பேச நடிகர் கமல்ஹாசனுக்கு பெங்களூரு கோர்ட் தடை விதித்துள்ளது. தக் லைஃப் பட புரமோசனின்போது தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என பேச அது சர்ச்சையானது. இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்புகள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதன் விளைவாக, கமல் இனி கன்னட மொழி குறித்து பேசக் கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News July 6, 2025

விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த பிரசாந்த் கிஷோர்!

image

தேர்தலுக்காக TVK தீவிரமாக தயாராகி வரும் நிலையில், அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்(PK) தற்காலிகமாக விலகியுள்ளார். பிஹாரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள உள்ளதால் தனது சொந்த கட்சியை(ஜன் சுராஜ்) கவனிக்கவும், சிறிது காலம் ஓய்வுக்காகவும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளாராம். விஜய் விரைவில் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ள நிலையில், PK-வின் இந்த முடிவு TVK-வினருக்கு ஷாக் கொடுத்துள்ளது.

News July 6, 2025

திருச்செந்தூர் குடமுழுக்கு: புனித நீர் தெளிக்க ட்ரோன்

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜூலை 7) காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் நடைபெறுகிறது. 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ட்ரோன் மூலம் 20 இடங்களில் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!