News September 10, 2024
கல்வி உதவித்தொகை பெற ஆட்சியர் அழைப்பு
புதுகை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 60% மேல் எடுத்து தேர்ச்சி பெற்ற முன்னாள் படை வீரர்களின் மகன் மற்றும் மகளுக்கு 2024-25ஆம் கல்வியாண்டில் தொழில் கல்விக்கான பாரத பிரதமர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஓராண்டு கல்வி உதவித்தொகையாக மாணவர்களுக்கு 30,000 மாணவிகளுக்கு 36,000 வழங்கப்படும். இதற்கு www.ksb.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News November 20, 2024
இலுப்பூரில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (20.11.2024) நடைபெற்ற அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
News November 19, 2024
தண்டலை ஊராட்சியில் ஆட்சியர் ஆய்வு
மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், தண்டலை ஊராட்சி, அய்யனார்கோவில், காட்டுகொல்லை குடியிருப்பு பகுதியில், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பெய்த கனமழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீரினை, மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று (19.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 19, 2024
அறந்தாங்கி : புதிய பள்ளி கட்டிடம் ஆய்வு செய்த அமைச்சர்
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் திருநாளூர் வடக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 206.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக 7 வகுப்பறையுடன் கூடிய கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.