News September 10, 2024
சேலம் கலெக்டர் வேண்டுகோள்

இன்று (செப்.10) சேலம் மரவனேரி புனிதபால் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடையுமாறு மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார். நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் கலந்துகொண்டு உயர்கல்விக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், வங்கி கடனுதவிகள் தொடர்பான சேவைகள், தொழில்நுட்பக் கல்வி குறித்த ஆலோசனைகளையும் வழங்கவுள்ளனர்.
Similar News
News July 8, 2025
சேலத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜூலை 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ▶️ உடையாப்பட்டி துணை மின் நிலையம் ▶️மேட்டுப்பட்டி துணை மின் நிலையம் ▶️மல்லியக்கரை துணை மின் நிலையம் ▶️கருப்பூர் துணை மின் நிலையம் ▶️நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர் ஆர்.எஸ். துணை மின் நிலையங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது.SHAREit
News July 8, 2025
இந்தியாவிலேயே தமிழகத்திற்கு தான் ஐ.நா விருது கிடைத்துள்ளது!

“இந்திய மருத்துவத்துறை வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஒரு துறைக்கு ஐ.நா. விருது கிடைக்கப் பெற்றுள்ளது
தமிழகத்திற்கு தான். இந்தியா முழுவதும் விபத்தில் சிக்கும் மக்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக அடித்தளமிட்டவர் தமிழக முதலமைச்சர் தான்” என சேலத்தில் நடந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!
News July 7, 2025
சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு!

சேலம் மாவட்ட விவசாயிகள் விளைபொருட்களை விற்க ஒவ்வொரு வட்டாரத்திலும் பொது சேகரிப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையோ அல்லது சேலம் உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள சேலம் விற்பனைக் குழு தலைமை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.