News September 10, 2024

ஆரணியில் 2,735 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

image

ஆரணி சட்டமன்றத் தொகுதியில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 2,735 பயனாளிகளுக்கு 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யாறு ஜோதி செங்கம் கிரி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News August 25, 2025

தி.மலை மக்களே ரூ.3 லட்சம் மானியம் வேண்டுமா?

image

தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு Readymade Garments அமைக்க ரூ.3 லட்சம் மானியம் தருகிறது. தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி பொருளாதார மேம்பாடு அடைய Readymade Garments அமைக்க இது உதவும். கலெக்டர் ஆபிசில் உள்ள மாவட்ட பிற்படுத்தபிற்பட்டோர் நல அலுவலகத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. மேலும் விபரங்களுக்கு இங்கு <<17509961>>கிளிக் பண்ணுங்க<<>>

News August 25, 2025

தி.மலை மக்களே ரூ.3 லட்சம் மானியம் வேண்டுமா?

image

கார்மெண்ட்ஸ் அமைக்க அரசு தரும் ரூ.3 லட்சம் மானியம் பெற குறைந்து 10 பேரை உறுப்பினராக கொண்ட குழுவாக இருந்து விண்ணப்பிக்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் BC/MBC/DNC சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது 20 மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். *பிஸ்னஸ் பண்ண நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க*

News August 25, 2025

திருவண்ணாமலை பின்னணியில் புதிய திரைப்படம்

image

பிக் பாஸ் ராஜு நடித்த ‘பன் பட்டர் ஜாம்’ படத்தை தயாரித்த சுரேஷ் சுப்பிரமணியன் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, தி.மலை பின்னணியில் ஆன்மிக திரில்லர் கதையை படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். இதுகுறித்து அவர் திருவண்ணாமலை பின்னணி கதையில் பிரபலமான நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பேசி வருகிறோம் என்றார். தி.மலை பின்னணியில் புதிய படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

error: Content is protected !!