News September 9, 2024
கலெக்டரிடம் மனு வழங்கிய மக்கள்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 468 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினர்.
Similar News
News September 4, 2025
நாமக்கல்: வாடகை வீட்டு வாசிகளின் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News September 4, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து வரும் வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் .
News September 4, 2025
நாமக்கல் மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க