News September 9, 2024

சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

image

அதிமுக எம்எல்ஏக்களை அவதூறாக பேசியதாக, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று(செப்.,9) விசாரணைக்கு வந்த நிலையில் செப்டம்பர் 13 ஆம் தேதி சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவிட்டு நீதிபதி ஜெயவேல் வழக்கை ஒத்திவைத்தார்.

Similar News

News August 31, 2025

மாநகரில் இன்று இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆகஸ்ட் 30) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News August 31, 2025

நெல்லையப்பர் கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம்

image

நெல்லையப்பர் கோவிலுக்கு பரம்பரை வழிமுறை சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை கோயிலிலோ அல்லது இந்து சமய அறநிலையத்துறை, திருநெல்வேலி அலுவலகத்திலோ பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, அஞ்சலிலோ அல்லது www.hrce.tn.gov.in இணையதளத்திலோ 30.09.2025 மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம்.

News August 30, 2025

செப். மாத மின் பகிர்மான குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் சார்பில் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். 16ஆம் தேதி நெல்லை நகர்புற கோட்ட அலுவலகத்திலும், 23ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும், 26 ஆம் தேதி நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும் பகல் 11 மணிக்கு முகாம்கள் நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!