News September 9, 2024
வதந்தி பரப்புவோரை கண்டிக்கிறேன்: இபிஎஸ்

TVKவில் செஞ்சி ராமச்சந்திரன் இணையவுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என இபிஎஸ் மறுத்துள்ளார். இது போன்ற வதந்தி பரப்புபவர்களை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக ஒரு கடல் என்றும், வலிமையான இயக்கம் எனவும் நம்பிக்கை தெரிவித்த அவர், செஞ்சி ராமசந்திரனை போல ஆயிரக்கணக்கான பேர் அதிமுகவில் அங்கம் வகித்து உழைத்து வருவதாகவும் விளக்கமளித்தார்.
Similar News
News August 19, 2025
இன்று இரவுடன் ₹249 பிளானை ரத்து செய்யும் ஏர்டெல்!

முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், இன்று நள்ளிரவுடன் முக்கியமான ரீசார்ஜ் பிளானை ரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹249 ரீசார்ஜ் செய்தால் 28 நாள்களுக்கு இலவச அழைப்புகளுடன் தினமும் 1GB இன்டர்நெட் சேவையை அந்நிறுவனம் வழங்கி வந்தது. இந்த பிளான் இன்று நள்ளிரவுடன் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த பிளானை ஜியோ நிறுவனம் நேற்று நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
News August 19, 2025
ரயிலில் அதிக லக்கேஜுடன் பயணம்.. இனி அபராதம் உண்டு!

விமான பயணங்களை போல் ரயில் பயணங்களில் <<17452208>>அதிக லக்கேஜ் கொண்டு சென்றால் கட்டணம்<<>> வசூலிக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது. அதிகபட்சமாக பயணி ஒருவர் முதல் ஏசி வகுப்பில் 70 கிலோ, இரண்டாம் ஏசி வகுப்பில் 50 கிலோ, மூன்றாம் ஏசி/ ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோ, பொது மற்றும் 2S-ல் 35 கிலோ வரை லக்கேஜ் எடுத்து செல்லலாம். இந்த எடை அளவுகளை விட அதிகமாக எடுத்துச் செல்லப்படும் லக்கேஜிற்கு அபராதம் வசூலிக்கப்படும்.
News August 19, 2025
படம் எடுக்கலாம்.. ஸ்கூல் பசங்களுக்கு ஹேப்பி நியூஸ்

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறார் திரைப்பட மன்றம் சார்ந்த போட்டிகள் நாளை(ஆக.20) தொடங்கவுள்ளது. இதில், ‘ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக நான்’ என்ற 3 நிமிட படத்துக்கு கதையுடன் வசனம் எழுதுதல், மரங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் 1 நிமிட படத்தை உருவாக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. மார்க் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். நீங்க ரெடியா..!