News September 9, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடைபெற்றதில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் மற்றும் உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் அருணா வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் உலகநாதன் உடன் இருந்தார்.

Similar News

News April 29, 2025

குடிநீர் குறித்த பிரச்சனைகளுக்கு அழைக்க வேண்டிய எண்கள்

image

கோடைகாலம் நெருங்கும் நிலையில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு அல்லது குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு தங்கள் பகுதிகளில் குடிநீர் குறித்த பிரச்சனைகள் மற்றும் அடிப்படை குடிநீர் குறித்த புகார்களுக்கு நிர்வாக பொறியாளர், RWS பிரிவு, புதுக்கோட்டை – 04322-221521 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்

News April 29, 2025

புதுகை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

image

புதுகை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் சித்திரை திருவிழா மெகா ஆதார் சிறப்பு முகாம் நாளையுடன் (ஏப்.30) முடிவடைகிறது. இதில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்து கொள்ளலாம். இதற்கு பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 மட்டுமே கட்டணம் ஆகும். இந்த வாய்ப்பினை மாவட்டத்திலுள்ள 31 துணை அஞ்சலகங்களில் மூலம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்.

News April 28, 2025

புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (28.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!