News September 9, 2024
சேலம்: 108 ஆம்புலன்ஸ் மூலம் 42,000 பேர் பயன்

சேலம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 42,930 பேர் பயன் அடைந்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 10,599 பேர் கர்ப்ப கால சேவை மூலம் பயன் பெற்றதாகவும். சாலை விபத்துகளில் காயம் அடைந்த 7,171 பேர் பயன் பெற்றதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் ஆம்புலன்ஸ் அவர்களை விட 108 ஆம்புலன்ஸ் மூலம் அதிக அளவில் மக்கள் பயனடைந்துள்ளனர்.
Similar News
News July 8, 2025
டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அரசு வேலை!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ, இன்ஜினியரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு சேலத்தில் வரும் 31ஆம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு <
News July 8, 2025
அடுத்தடுத்து 2 வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

கருப்பூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தனபால், இன்று மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.5,000 பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதேபோல், தனபால் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ரகுநாத் என்பவர் வீட்டிலும் ரூ.5,000 திருடு போனது. அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News July 8, 2025
சேலத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜூலை 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ▶️ உடையாப்பட்டி துணை மின் நிலையம் ▶️மேட்டுப்பட்டி துணை மின் நிலையம் ▶️மல்லியக்கரை துணை மின் நிலையம் ▶️கருப்பூர் துணை மின் நிலையம் ▶️நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர் ஆர்.எஸ். துணை மின் நிலையங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது.SHAREit